காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தி.மு.க. தலைமையகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை

தி.மு.க. தரப்பில் 28 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தி.மு.க. தலைமையகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை
Published on

சென்னை

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் கோஷம் எழுப்பியது. அதன்பிறகு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று தி.மு.க. தலைமையை வலியுறுத்தியது. ஆனால், தி.மு.க. தரப்பில் 25 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். கடைசி முயற்சியாக, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்திடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கட்சி தலைமை கோரியது.

Also Read
தெலுங்கானா: காமேனி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆயிரக்கணக்கான ஈரான் சமூகத்தினர் பேரணி
காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தி.மு.க. தலைமையகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை

அதன்படி, ப.சிதம்பரம் நேற்று மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. இடையே சிறிது நேரம் மு.க.ஸ்டாலின் - ப.சிதம்பரம் ஆகியோர் தனியாகவும் ஒரு அறையில் சென்று பேசியுள்ளனர்.

கடைசியாக, காங்கிரஸ் தரப்பில் 35 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க. தரப்பிலோ, 28 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இதில், நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட்டும், அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட்டும் தருகிறோம் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக சென்னையில் தி.மு.க. தலைமையகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்-அமைச்சரான மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவருடன் எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com