

கோவை,
கோவை ஓண்டிபுதூர் பகுதியில் 13 வயது சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் அடித்ததில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, காவலர் துர்காராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.