கோவை: பா.ஜ.க. மண்டல தலைவர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் A.P.முருகானந்தம் மற்றும் மாநில பொருளாளர் S.R.சேகர் ஆகியோரின் ஒப்புதலுடன் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டல தலைவராக செயல்பட்டு வந்த R.சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியினுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com