கோவை: பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

சந்தேகத்துக்குரிய வகையில் கையில் பையுடன் இருந்த நபரை சோதனை செய்ததில், அவரிடம் கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணம் இருந்துள்ளது.
கோயம்புத்தூர்
கோவை மாவட்டம் காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சத்தியவன் என்ற நபர் கையில் பையுடன் இருந்துள்ளார். போலீசார் அவரை சோதனை செய்ததில், அவரது பையில் கட்டுக்கட்டாக ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம் இருந்துள்ளது.
அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கான எந்த உரிய ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை காட்டூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்து பறிமுதல் செய்த ரூ.35 லட்சத்தை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






