தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை பெற்ற கோவை

சிறந்த மாநகராட்சிக்கான இரண்டாம் பரிசு தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை பெற்ற கோவை
Published on

சென்னை,

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர தினத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுதந்திர தின சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

இதன்படி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவை பெற்றது. அதே போல், சிறந்த மாநகராட்சிக்கான இரண்டாம் பரிசு தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கும், இரண்டாம் பரிசு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கும், மூன்றாம் பரிசு விழுப்புரம் நகராட்சிக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com