ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.55 லட்சம் காணிக்கை வசூல்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.55 லட்சம் காணிக்கை வசூலானது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.55 லட்சம் காணிக்கை வசூல்
Published on

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும், உண்டியலை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.55 லட்சத்து 9 ஆயிரத்து 921 ரொக்கமும், 135 கிராம் தங்கமும், 855 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 250-ம் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com