நடமாடும் ரேஷன்கடை மூலம் பொருட்கள் வினியோகம்

சிலுவம்பட்டி போலீஸ் குடியிருப்பில் நடமாடும் ரேஷன்கடை மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடமாடும் ரேஷன்கடை மூலம் பொருட்கள் வினியோகம்
Published on

நடமாடும் ரேஷன்கடை

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 115 கடைகள் நடமாடும் ரேஷன்கடையினை செயல்படுத்தி வருகின்றன. இந்த கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

குறிப்பாக நடமாடும் ரேஷன்கடைகளை சிலுவம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, ஆரியூர், அணியாபுரம் லத்துவாடி உள்ளிட்ட ரேஷன் கடைகள் செயல்படுத்தி வருகின்றன.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் சிலுவம்பட்டி ரேஷன் கடையின் மூலம் காவலர் குடியிருப்பு பகுதியில் நடமாடும் ரேஷன்கடை மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பயன்பெறும் குடும்ப அட்டைகள், வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்க வேண்டும், தரமான பொருட்களை சரியான அளவில் வழங்கிட வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக அவர், திருச்செங்கோடு தாலுகா புத்தூர் கிராமத்தில் இணையவழி வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com