நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு

நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு
Published on

நாலாட்டின்புத்தூர்:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நாலாட்டின்புத்தூரில் உள்ள காவல் போலீஸ் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்களை அவர் பார்வையிட்டார். மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியில் இருந்து போலீஸ் அதிகாரிகளிடம் அவர் குறைகள் கேட்டார். இதில் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com