

வாகன சோதனை
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அசோக் (வயது 32). இவர் சம்பவத்தன்று இரவு போலீசா ருடன் இணைந்து வடசேரி காசி விஸ்வநாதர் கோவில் சந்திப்பில் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீ சார் வழிமறித்து சோதனை செய்தனர்.இதில் காரை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. விசா ரணையில் அவர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த சாமுவேல் (35) என்பதும், ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாக சாமுவேல் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மது அருந்தாத வேறுநபரை வரவ ழைத்து காரை எடுத்துச் செல்லும்படி போலீசார் கூறியதாக தெரிகிறது.
ஆனால் சாமுவேல், போலீசார் கூறிய அறிவுரையை ஏற்காமல் அவர்கள் கட்டுப் பாட்டில் இருந்த தனது காரை எடுத்துக்கொண்டு மீண்டும் பார்வதிபுரம் நோக்கி சென்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தனது இருசக்கர வாகனத்தில் சாமுவேலை பின்தொடர்ந்தார்.கிருஷ்ணன்கோவில் பகுதியில் சென்ற போது காரின் முன்னால் தனது இருசக் கர வாகனத்தை நிறுத்தி காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் சாமுவேல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு காரால் சப்-இன்ஸ்பெக்டர் மீது ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.