கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வு பயத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவரின் மனைவி செல்வி. கணவர்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சாமுவேல் (வயது 19)திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் முதலாம் ஆண்டின் அனைத்து பாட தேர்வுகளும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-ம் ஆண்டு தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயத்தில் இருந்துள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று  மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com