அயனாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

அயனாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அயனாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

சென்னை அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 19). இவர் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாய் ஜானகி தச்சு வேலையும், இவரது தம்பி பாபு என்பவர் அம்பத்தூரில் தனியார் கம்பெனியிலும் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டு வேலை செய்து வந்த கற்பகம் மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் செல்வி வீட்டில் சோதனை செய்ததில், கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தனக்கு வாழ்க்கை வெறுத்து போய்விட்டது என்றும், வாழ பிடிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்து இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com