தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன.
கனிமொழி
Published on: 

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவர் இசக்கிராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது.

கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது.

சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com