சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.
சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த புதுப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). இவர் பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சஞ்சய் நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்தார். சஞ்சயின் உடலை அவரது உறவினர்கள் நேற்று புதுப்பேர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு

சஞ்சய் தற்கொலை செய்து கொண்டது குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சஞ்சய் உடல் எரிக்கப்படுவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீ வைத்து எரிந்து கொண்டிருந்த உடலை பாதியில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவன் சஞ்சய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம்? காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சோமங்கலம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ வைத்து எரியூட்டப்பட்ட உடலை பாதியில் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com