சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு

கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
 கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தட்டாங்கோவில் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Also Read
சிஇ20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
 கோப்புப்படம்

அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கல்லூரி மாணவர் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இதனையடுத்து அந்த மாணவி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read
ரஜினிகாந்தைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது - யோகிபாபு
 கோப்புப்படம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com