ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஈரான் நாட்டில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி வாயிலில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) வ.உ.சி. கல்லூரி கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் அன்சிலின் ஜெமிமா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு, ஈரான் நாட்டில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com