விஜய்யை கைது செய்ய கோரி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்தெறிந்த கல்லூரி மாணவிகள்

விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை, அந்த வழியாக சென்ற இளைஞர்களும் கிழித்தனர்.
வடலூர்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் வடலூரில் கடைவீதி, நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தமிழ்நாடு மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
அதில், தமிழக அரசு, த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனிடையே நேற்று அந்த பகுதிக்கு வந்த கல்லூரி மாணவிகள் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற இளைஞர்களும் சுவரொட்டிகளை கிழித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story






