

கோவை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கிளாஸ்கோ- 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளது.
நமது விளையாட்டு வீரர்கள் ஈடு இணையற்ற உறுதி, மனவுறுதி மற்றும் சிறப்பை வெளிப்படுத்தி 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 39 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தனர். ஒவ்வொரு பதக்கமும் வளர்ந்து வரும் இந்தியாவின் உணர்விற்குச் சான்றாகும். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பயிற்சியாளருக்கும் மற்றும் துணைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.