கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. கூட்டணிக்கு வருவார்கள்: அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. கூட்டணியில் வருவார்கள் என நம்புவ தாக அமைச்சர் ஷாஜகான் கூறினார்.
அமைச்சர் ஷாஜகான்
Published on

நாகர்கோவில்,

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் வரக்கூடிய நாட்களில் எங்கள் கூட்டணிக்குள் வருவார்கள் என்று திடமாக நம்புகிறோம். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்திற்கு வருகிற எதிர்ப்புகள் முதல்-அமைச்சருடைய கவனத்திற்கு சென்றுள்ளது. அவர் தீர ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்.

புதிய தலைமை செயலகம்

தற்போதைய தலைமைச் செயலகம் பழமையான கட்டிடமாக இருப்பதுடன், சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் நெருக்கடியாக உள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டவேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் தோட்டத்தில் தலைமை செயலகம் கட்டப்பட்டு அது இப்போது அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ராணி மேரி கல்லூரியில் கட்டுவதற்கு திட்டமிட்டனர். .

அதுவும் தடைபட் டது. எந்த இடத்தில் கட்டினாலும் இதைப்போல எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். பட்டினப்பாக்கத்தில்தான் கட்டுவதாக முடிவானாலும், அந்த இடத்தில் உள்ள மக்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் நிச்சயமாக செய்யப்படும். கம்யூனிஸ்டு கட்சிகள் ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இந்த எதிர்ப்புகளையும் கணக்கில் கொண்டு அரசு இறுதி முடிவு எடுக்கும்

தொழுகை

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் சிறுபான்மையினருக்கான நிதியும் திட்டங்களும் போதுமானதாக இல்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்து தற்போது தடைபட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, இந்த மாத இறுதியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com