மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும், சத்தீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் ஒப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி. டுவீட்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும், சத்தீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் ஒப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி. டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும், சத்தீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் ஒப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி. டுவீட்
Published on

மதுரை,

சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

"சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவனை பணிகள்தான் 95% முடிந்துள்ளன. அந்த மருத்துவமனையைத்தான் வரும் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.

அதே 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் இன்னமும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95% பணிகள் முடிந்துவிட்டது என்று கூறினால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜெ.பி. நட்டா சொன்ன 95% பணிகள் பிலாஸ்பூரில்தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com