செவிலியர் பணிக்கு கடும் போட்டி: 4,724 இடங்களுக்கு 49 ஆயிரம் பேர் விண்ணப்பம்

நேற்று முதல் பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
செவிலியர் பணிக்கு கடும் போட்டி: 4,724 இடங்களுக்கு 49 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Published on: 

சென்னை,

தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை போக்கும் வகையில், 4,724 செவிலியர் பணியிடங்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தேசிய நலவாழ்வு குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் 49 ஆயிரம் செவிலியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

49 ஆயிரம் விண்ணப்பங்கள்

மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கங்கள் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக பெறப்பட்ட 49 ஆயிரம் விண்ணப்பங்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பணி ஒதுக்கீட்டு ஆணை

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை தேர்வு செய்வதற்கு சில செவிலியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளை, அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர ஏராளமான செவிலியர்கள் ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கங்கள் மூலம் நேற்று முதல் பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com