தேசியக்கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார்

தேசியக்கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசியக்கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார்
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 40). தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூடியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com