வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் முறைகேடு புகார்: உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வழக்கு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் முறைகேடு புகார்: உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வழக்கு
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், சமீபத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்யவும் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், கரூர் மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் செந்தில்பாலாஜி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com