பெரியார் அறிவுலக நூல்களில் தமிழர் வரலாறு தவறாக இடம் பெற்றதாக புகார் - வானதி சீனிவாசன் கண்டனம்

வாசிப்பாளர்களுக்கு முற்றிலும் குழப்பமடையும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
வானதி சீனிவாசன்
Published on: 

கோவை,

கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூல்களில் தமிழர் வரலாறு தவறாக இடம் பெற்றதாக கூறப்படும் செய்தி மிக அதிர்ச்சி அடைய வைக்கிறது என முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மிகப் பெரிய ஊழல்

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழலும், புத்தகங்களில் தமிழர் வரலாறு, செய்யுள்கள் உள்ளிட்டவையும் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி மிக அதிர்ச்சி அடைய வைக்கிறது.

தமிழின் தொன்மை குறித்தும், தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உலகமெங்கும் பறைசாற்றி வரும் இவ்வேளையில் தவறான கருத்துக்கள், வரலாறு மற்றும் பிழைகளுடன் நூல்களைப் படிக்கும் இளைய சமுதாயமும், போட்டித் தேர்வர்களும், இலக்கிய ஆர்வலர்களும், வாசிப்பாளர்களும் முற்றிலும் குழப்பமடையும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

"A library is a place where history comes alive, where the past speaks to the present, and where the future is shaped." என்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சிந்தனைக்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானம் இது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X