சாலையை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார்: மாநகராட்சியிடம் கேட்கும்படி அனுப்பி வைத்த போலீசார்

சென்னை கொரட்டூரில் சாலையை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி மாநகராட்சியிடம் கேட்கும்படி கூறி குமாரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
சாலையை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார்: மாநகராட்சியிடம் கேட்கும்படி அனுப்பி வைத்த போலீசார்
Published on

சென்னை கொரட்டூர்சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர், கொரட்டூர் போலீசில் வினோத புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூரில் உள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டேன். அதற்கு அம்பத்தூர் செயற்பொறியாளர் சார்பில் பதில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில், அந்த சாலைகள் கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. போடாத சாலையை போட்டதாக கூறி மாநகராட்சி தரப்பில் வந்த பதிலை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனவே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து காணாமல் போன அந்த சாலையை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி மாநகராட்சியிடம் கேட்கும்படி கூறி குமாரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com