பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.96 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்
Published on

ஓசூர்

வாகன சோதனை

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் ரூ.96 ஆயிரம் மதிப்பிலான 214 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுரை முருகன்பத்திரி, நியூ ஜெயில் ரோட்டை சேர்ந்த மனோஜ்குமார் (29) என்பது தெரியவந்தது.

டிரைவர் கைது

இவர் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்காவை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தல் தொடர்பாக தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com