காரில் கடத்த முயன்ற ரூ.1¾ லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்த முயன்ற ரூ.1¾ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் கடத்த முயன்ற ரூ.1¾ லட்சம் குட்கா பறிமுதல்
Published on

வாகன சோதனை

ஓசூர் அட்கோ போலீசார் புதிய பஸ் நிலையம் எதிரில் ஜி.ஆர்.டி. ஜங்ஷன் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். காரில் 470 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பான்மசாலா, குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் ஆகும்.

பறிமுதல்

இதையடுத்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்காவை கடத்தியது தெரிய வந்தது. தப்பி ஓடிய டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com