மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நாகமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நாகமங்கலம் காலனி தெருவை சேர்ந்த முருகானந்தம்(வயது 35) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com