

சென்னை,
சென்னையில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் தவெக இருக்கிறதா? என்ற கேள்விக்கு "எப்போது தவெகவுக்கு எம்.பி.க்கள் கிடைக்கிறார்களோ, அப்போது அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ள சொல்வோம். எம்.பி. இல்லாதவர்களை நாங்கள் கூட்டணியில் இணைய வரச்சொல்ல முடியாது. தற்போது அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடையாது. எம்.பி. இருந்தால் இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.
சட்டசபை தேர்தலில் தவெக 106 இடங்களைப் பிடித்து வென்ற பிறகு விஜய் முதலில் போன் செய்தது ராகுல் காந்திக்கு தான். அவர் முதல்-அமைச்சராவதற்கு ராகுல் காந்தியிடம் தான் அவர் ஆதரவு கேட்டார். தவெகவுக்கு முதல் ஆதரவு கடிதம் காங்கிரஸ் கட்சி தான் கொடுத்து. அதனால், தவெகவின் இன்றைய அமைச்சர்கள் அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்களெல்லாம் அமைச்சராவதற்கு காங்கிரசின் ஆதரவு முதலில் வந்தது.
இல்லையென்றால், மத்திய மந்திரி அமித்ஷா தவெகவின் கதையையும் முடித்திருப்பார். இந்நேரம் கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கியிருப்பார்கள் அவர்களைப் பொறுத்தவரை இந்த நிலை அனைவருக்கும் புரியும். முதலில் தேர்தல் வரட்டும். விஜய் எப்போதும் குறைவாகவேப் பேசுவார். தேர்தல் வரட்டும். பேச வேண்டிய நேரத்தில் அவர் சரியாகப் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.