காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

களக்காடு:

பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னர் ரவியை கண்டித்தும் களக்காட்டில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா மற்றும் அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, மூலைக்கரைப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com