காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதிய பாராளு மன்ற கட்டிட திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காததை கண்டித்தும், தன்னிச்சையாக நடக்கும் பா.ஜ.க.வை கண்டித்தும் வாணியம்பாடி கோணாமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு மாநில காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வக்கீல் அஸ்லம்பாஷா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com