காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் சித்ரஞ்சன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன், சிறுபான்மைபிரிவு மாவட்ட தலைவர் வாகித்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.

இதில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடி திறப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com