காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்
Published on

மலைக்கோட்டை:

திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் திடீரென நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் மாற்றப்பட்டதை கண்டித்து, மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் புத்தூர் சார்லஸ், கோட்ட தலைவர்கள் ரவி, செல்வகுமார், நிர்வாகிகள் குமார், கஸ்பர் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com