காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயக்கம்

சென்னை ராயப்பேட்டையில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கிரிஷ் சோடங்கர் பங்கேற்று இருந்தார்
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயக்கம்
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தெரிகிறது.

இந்தக் கூட்டம் முடிந்து புறப்பட்ட கிரிஷ் சோடங்கர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீரானது.

இதையடுத்து, அவர் உடனடியாக விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். காலையில் இருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றதால் உணவு உட்கொள்ளவில்லை. அதனால் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com