தவெக அமைச்சரவையில் காங்கிரசிற்கு இடம்: ஜி.கே.வாசன் வரவேற்பு

காங்கிரஸ் உடன் இணைந்து தமாகா செயல்படும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தவெக அமைச்சரவையில் காங்கிரசிற்கு இடம்: ஜி.கே.வாசன் வரவேற்பு
Published on

சென்னை,

அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கப்பட்டதை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், காங்கிரஸ் இருந்தால் நேர்மையாக இருக்கும். கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தற்போது அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்” என்றார்.

மேலும், காங்கிரஸ் உடன் இணைந்து தமாகா செயல்படும் என்றும், அதே நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தனது தனித்தன்மையுடன் இயங்கும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com