

சென்னை,
கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக கடந்த ஆண்டு அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகளுக்கு பதவி கிடைத்ததற்கு திராவிடர் இயக்கம் தான் காரணம் என்று பேசினார்.
அப்போது, சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். இதையடுத்து, அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அட்வகேட் ஜெனரலிடம் வக்கீல் ஆண்டனி ராஜ் என்பவர் மனு கொடுத்தார். இதை விசாரித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.