கொரோனாவால் கட்டுமான பணிகள் பாதிப்பு: கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் - தமிழக அரசு முடிவு

கொரோனா பாதிப்பை ஈடுகட்ட கட்டிடங்கள் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் வழங்குவதாக வீட்டுவசதித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் கட்டுமான பணிகள் பாதிப்பு: கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் - தமிழக அரசு முடிவு
Published on

சென்னை,

கெரேனா பாதிப்பை ஈடுகட்ட கட்டிடங்கள் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் வழங்குவதாக வீட்டுவசதித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் படி தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, முதலில் 5 ஆண்டுகள் அனுமதியளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கெரேனா காலத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கெண்டு, கட்டிட அனுமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை அடிப்படையில், குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் கட்டிட அனுமதி பெற்றவர்களின் அனுமதிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் இழப்பை கருத்தில் கொண்டு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக வீட்டுவசதித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com