குளியலறையில் வழுக்கி விழுந்துகட்டிட தொழிலாளி சாவு

குளியலறையில் வழுக்கி விழுந்துகட்டிட தொழிலாளி சாவு
Published on

பள்ளிபாளையம்

வெப்படை அருகே ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுதா (38). நேற்று காலை மணிகண்டன் வீட்டில் குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வரும்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி வெப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி அவரது உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com