

சென்னை,
அடையாறு கோட்டத்தில் வரும் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம். இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு செயற் பொறியாளர்/இ&ப/அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-II)கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.