ஓசூர் அருகே கண்டெய்னர் லாரியும், காரும் மோதி விபத்து - 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

ஓசூர் அருகே காமன்தொட்டி பகுதியில் கண்டெய்னர் லாரியும், காரும் மோதி 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஓசூர் அருகே கண்டெய்னர் லாரியும், காரும் மோதி விபத்து - 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
Published on

ஓசூர்,

நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற கார் மீது லாரி மோதியதில் காரில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். காரில் சென்ற ஒருவரும், லாரியில் சென்ற ஒருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கி பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com