தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது - நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட கனமழை முன்னறிவிப்பைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு 16.10.2024 இன்று திறக்கப்படாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com