தொடர் மழை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு

நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஒரே நாளில் 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடர் மழை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு
Published on

தருமபுரி,

கோடை வெயில் காரணமாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்தது.

இந்த நிலையில், அஞ்செட்டி, கேரெட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஒரே நாளில் 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com