தொடரும் பாலியல் குற்றங்கள், குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் “தூயசக்தி” - நயினார் நாகேந்திரன்

சீரழிந்த சட்டம் ஒழுங்கை சமன் செய்து, குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்த கொடூரத்தின் பதற்றம் தணியும் முன்பே, நேற்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே, 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி தாக்கி, வாயில் துணியை வைத்து அடைத்து இரு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

கடந்த ஒரு மாத காலமாக, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளைப் பார்த்தால், பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே அச்சம் உண்டாகிறது. விளையாடச் செல்லும் குழந்தைகளும், படிக்கப் போகும் பிள்ளைகளும், வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர்களும் பாதுகாப்பாக இருப்பார்களோ இல்லையோ என மக்கள் அன்றாடம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வது தான் விஜய் தம்பட்டம் அடித்த மாற்று அரசியலா? தன்னை நம்பி வாக்களித்த பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, முதல்வருக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் அவகாசம் வேண்டும்?

எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் இனியும் சமரசம் செய்யாமல், சீரழிந்த சட்டம் ஒழுங்கை சமன் செய்து, குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com