நெல்லையில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை முருகன் கோவிலிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடையம் பகுதியில் உள்ள கடனா நதி அணையில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, அணையில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை மாநகர் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை முருகன் கோவிலிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
ஆற்றின் இரு கரைகளையும் தண்ணீர் தொட்டுச் செல்கிறது. இந்த நிலையில், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






