தொடர் கனமழை: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு
Published on

தென்காசி,

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குற்றால சீசன் காலங்கள், மற்றும் அய்யப்ப சீசன் காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தின் நீர்வரத்து இருக்கும் போது, பொதுமக்கள் இங்கு மகிழ்ச்சியாக குளித்து செல்வர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com