தொடர் கனமழை; முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்வு

நீர்வரத்து வினாடிக்கு 340 கன அடியில் இருந்து 1,152 கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடர் கனமழை; முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்வு
Published on

தேனி,

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 340 கன அடியில் இருந்து 1,152 கன அடியாக அதிகரித்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக-கேரள எல்லை மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com