தவெக பெண் நிர்வாகி குறித்து சர்ச்சை பேச்சு: பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு

கடலூர் தவெக எம்எல்ஏ ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக பெண் நிர்வாகி குறித்து சர்ச்சை பேச்சு:  பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்களை பொன்ராஜ், கடந்த மார்ச் மாதம் இழிவாக விமர்சித்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் அக்கட்சியினர் கொந்தளித்தனர். தவெக தலைவர் விஜய் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி இரவு சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்திருந்தார்.

அதுமட்டுமின்றி பொன்ராஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கையும் விஜய் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பொன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் தவெக எம்எல்ஏ ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com