மனைவி-குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை உறுதி

மனைவி, குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதிசெய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மனைவி-குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை உறுதி
Published on

மனைவி, குழந்தை கொலை

தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். ஜவுளி வியாபாரியான இவர், கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி கோகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கிரைண்டர் கல்லால் அடித்து கொலை செய்ததுடன், 3 வயது மகளையும் சுவரில் அடித்துக்கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், சங்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், விசாரணை கோர்ட்டு தீர்ப்பில் ஐகோர்ட்டு தலையிட விரும்பவில்லை. எனவே மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதுடன், இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம் என உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com