பட்டமளிப்பு விழா

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழா
Published on

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தென் மண்டல இயக்குனர் அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 665 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவிற்கு கல்லூரி தலைவர் புதிய பாஸ்கர் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் கல்யாணி வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் வரவேற்று பேசினார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி மணிகண்டன் பேசினார். விழா ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com