பட்டமளிப்பு விழா

ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
பட்டமளிப்பு விழா
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் கே.ஜீ மாணவ- மாணவிகளுக்கான 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுப்பையா தலைமை தாங்கினார். பள்ளியின் பொது மேலாளர் மபத்லால், அன்பு அம்மாள் அறக்கட்டளை பொருளாளர் உஷா தேவி சுப்பையா, ராஜகுமாரி மபத்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஜெ.திவாகரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். முடிவில் பள்ளி துணை முதல்வர் முத்துஜா நன்றி கூறினார். முடிவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பெற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கே.ஜி. மாணவ- மாணவிகளின் பேச்சும் ஆட்டமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com