தமிழகத்தில் முதல் முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு - நாகை மாவட்டத்தில் தொடக்கம்

மீட்டர் கருவி மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை எரிவாயு பயன்பாட்டைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு - நாகை மாவட்டத்தில் தொடக்கம்
Published on

நாகை,

தமிழகத்தில் முதல் முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோக செய்யும் திட்டம் நாகை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீயாத்தமங்கை கிரமத்தில் 14 வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்புகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

தனியார் நிறுவத்தின் சார்பில் சீயாத்தமங்கை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எருவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போல எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு, சமையல் அறைக்கு நேரடியாக எரிவாயு குழாய்கள் கொண்டு செல்லப்படுகிறது.

எரிவாயு பயன்பாட்டை கணக்கிட ஒவ்வொரு வீட்டிலும் மீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிவாயு பயன்பாட்டைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com